தும்மோதர கொஸ்வத்தை பகுதியிலிருந்து அண்மையில் கடத்தப்பட்ட 65 வயதான உடுவில தம்மசிறி தேரர், கொட்டதெனியாவ மயானத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றதாகக் கூறப்படும் இக்கடத்தலின் பின்னணியில் ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்த சாசனத்தையும் தேசிய பாதுகாப்பையும் முன் வைத்து ஆட்சி பீடத்திலேறிய இவ்வரசின் காலத்தில் 2020 ஜனவரியில் ஒரு துறவியும், ஜுன் மாதத்தில் ஒரு துறவியும், டிசம்பரில் நெதர்லாந்தை சேர்ந்த துறவியும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கு என்னானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment