நீதியமைச்சரின் வேண்டுகோள்; சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 January 2021

நீதியமைச்சரின் வேண்டுகோள்; சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பு

 


நீதியமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளுக்கு அமைவாக 150 சட்டத்தரணிகள் ஸ்ரீலங்கா பொலிஸ் பிரதம ஆய்வாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.


இதனூடாக காவற்துறையில் சட்டத்தரணிகளின் பங்களிப்பை அதிகரிக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அலி சப்ரி முன் வைத்த திட்டத்துக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ள அதேவேளை அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டதும் இதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெறும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, தமிழ் மொழி தேர்ச்சி விசேட தகைமையாகக் கொள்ளப்படும் எனவும் இந்நியமனங்கள் நாடளாவிய ரீதியில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment