இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்போரின் உடலங்களை கட்டாயமாக எரிக்கும் நடைமுறையை தற்போதிருக்கும் விஞ்ஞான அறிவுக்கேற்ப மாற்றியமைக்கலாம். அடக்கத்தையும் அனுமதிக்கலாம் என அண்மையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது.
எனினும், அக்குழுவை யார் நியமித்தது என்றே தெரியாது எனவும் ஏலவே ஒரு நிபுணர் குழு அடக்கத்தை நிராகரித்துள்ள நிலையில் இரண்டாவது குழுவுக்கு அவசியம் என்ன எனவும் விசனம் வெளியிட்டுள்ளார் கொரோனா அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.
சுகாதார அமைச்சினால் குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்த அதேவேளை அறிக்கையை அரசுக்கு வழங்கியும் அது கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இவ்வார அமைச்சரவை சந்திப்பில் இது குறித்து ஆராயப்படும் எனும் இறுதி நம்பிக்கையும் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment