இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ள அதேவேளை சுகாதார அமைச்சின் முடிவில் இன்று எவ்வித மாற்றமும் இல்லையென தெரிவிக்கிறார் கெஹலிய ரம்புக்வெல.
நேற்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நிபுணர்கள் சார் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததோடு கட்டாய ஜனாஸா எரிப்பு முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான உரிமை மீறல் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இது குறித்து வினவப்பட்ட போது, சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே இலங்கையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் தற்போது மாற்றம் எதுவுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment