இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணை நடாத்தி காத்திரமான நடவடிக்கை எடுக்கும் என ஐ.நா மனிர உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதியிலிருந்து நடைமுறை அரசு விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு பெரும்பாலான நாடுகள் இணக்கம் கண்டுள்ளதுடன் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.
சர்வதேசம் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கப் போவதில்லையென்ற பிரச்சாரத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம், கடந்த மே மாதம் தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்ததன் பின்னணியிலேயே பல முக்கிய நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
ஆயினும், மார்ச் மாதம் நெருங்குகின்ற நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.டி நவாஸ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட ஆணைக்குழுவொன்றை நேற்றைய தினம் விசேட வர்த்தமானியூடாக நியமித்துள்ள ஜனாதிபதி, இதற்கு முன் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கண்டறிந்தவை என்ன? உண்மையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதா? சர்வதேச விதிகள் மீறப்பட்டதா? என ஆராயப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
ஜநாவில் இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலத்தில் பேசிய நீதிபதி நவாஸ் அவர்களை நியமித்திருப்பது என்பது இலங்கையின் ராஜதந்திர செயல் அதுமட்டும் அல்லாமல் சிறுபான்மையினரை யும் மோதவிடும் செயல் எது எப்படி இருப்பினும் இலங்கை அரசாங்கம் தற்காலத்தில் சிறு பான்மையினருக்கு செய்து வரும் அரசியல் பழிவாங்கள் உலகமே அறியும் அதற்கு விழை கொடுத்தே ஆக வேண்டும்.
அத்துடன் இந்தக் குழுவில் இருந்து முஸ்லிம் நபரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.
Post a Comment