எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தான் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மையில்லையென மறுத்துள்ளார் அமைச்சர் உதய கம்மன்பில.
மாறாக, விலை உயர்த்தப்படாவிட்டால் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 17 ரூபாவும், டீசல் லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாவும் இழப்பு ஏற்படுவதாக அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டியதாக தன் நிலை விளக்கமளித்துள்ளார்.
எனினும், எரிபொருளின் விலையை உயர்த்துவதற்குப் பதிலாக வரியைக் குறைப்பதன் ஊடாக இதனை ஈடு செய்ய முனைவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment