முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை விவகாரத்தின் பின்னணியில் பிள்ளையானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கினைக் கைவிடுவதாக மட்டக்களப்பு நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார் சட்டமா அதிபர்.
இப்பின்னணியில் புதனன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2005ம் ஆண்டு கிறிஸ்துமஸ் வழிபாட்டின் போது மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டதோடு அவரது மனைவியும் காயமடைந்திருந்தார்.
இவ்வழக்கில் கைதாகிய பிரதான சந்தேக நபரான பிள்ளையானுக்கு நவம்பர் மாதம் பிணை வழங்கப்பட்ட அதேவேளை பிள்ளையான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment