நீதியமைச்சர் அலி சப்ரியை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கக் கோரி கண்டியில் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது சிங்ஹலே தேசிய கூட்டணி.
ஜனாஸா எரிப்பு விவகாரத்தைத் தடுப்பதற்கு எதையும் செய்யவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டு வரும் அலி சப்ரி, ஒரே நாடு ஒரே சட்டம் எனும் நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கடும்போக்குவாதிகள் அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
நாடாளுமன்றுக்கு வெளியில் ஜனாஸா எரிப்புக்கு ஆதரவாகப் பேசுகிற போதிலும் நாடாளுமன்றில் வினா எழுப்பப்பட்டால் அரசாங்கம் ஜனாஸா எரிப்புக்கான முடிவை விஞ்ஞான ரீதியிலேயே முன்னெடுப்பதாக நீதியமைச்சர் பதில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஜனாஸா எரிப்பின் விபரீதத்தை அரசுக்கு மேலும் உணர்த்த அலி சப்ரி பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை முஸ்லிம் தரப்பிலிருந்தும் முன் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
ஒரு கட்டு விறகினை அவர் எவ்வளவுதான் பலமுள்ளவராக இருந்தபோதிலும் தனி ஒருவராக நின்று அவற்றை முறித்துவிட முடியாது. உலகில் 195 நாடுகள் இருக்கின்றன. அதில் இலங்கையும் ஒன்று. மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. ஆயினும் அவரகளை எல்லாம் கூடியவரை ஒரு வட்டத்தினுல் கொண்டு வர வேண்டியது அரசின் மற்றும் புத்திஜீவிகளின் கடமை. அலி சப்ரி அவரகள் அரசில் இருந்துகொண்டு தமக்கு தாமே செய்ய வேண்டியதை செய்யக்கூடியதாக இருந்தால் அங்கு அவர் இருப்பதில் பிரச்சினை எவருக்கும் இருக்க முடியாது. முஸ்லிம இனத்தின் சார்பாக அரசில் இருப்பதாக இருந்தால் சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும். முடியவில்லை என்றால் தம் பழைய தொழிலுக்குச் சென்றுவிடுவது மிகவும உத்தமம்.
Post a Comment