பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஏலவே இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றின் பின்னணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தானாக முன் வந்து பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டதன் பின்னணியில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் குமார ஹெட்டிகேவுக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டு, தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சி.சி.டி.வி ஒளிப்பதிவினை ஆராய்ந்து மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனிமைப்படுமாறு அறிவுறுத்தல் வழஙக்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment