கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் தனிமைப்பட்டிருக்கும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்குத் தாம் தயாரித்த ஆயுர்வேத கொரோனா எதிர்ப்பு பானி வழங்கியதாக தெரிவிக்கிறார் 'ராவணா பானி' எனும் திரவத்தை அறிமுகப்படுத்தி சர்ச்சையை உருவாக்கிய லக்சித ரணசிங்க எனும் நபர்.
குறித்த நபரின் கூற்றுக்களை ஹிரு தொலைக்காட்சி ஒளிபரப்பியதையடுத்து அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார் தயாசிறி ஜயசேகர. தான் அவ்வாறு எதையும் பருகவில்லையெனவும் மருத்துவர்களின் அறிவுரைக்கேற்ப தனிமைப்பட்டு சுகாதார வழிகாட்டலைப் பேணுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
ராவனா பானி உரிமைக்காரர், தனது திரவத்தை அமைச்சர் வாசு தேவ நானாயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீமுக்கும் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment