ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் தெற்காசியாவின் தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி ஆலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதுடன், 80 வீதமான உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏற்றுமதி சந்தை அபிவிருத்தி, ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் இறப்பர் செய்கையாளர்களுக்கு கிடைக்கும் அதிக விலைகள் போன்ற நன்மைகள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment