சாட்சிகளை மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மற்றும் இரு கடற்படையினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டில் மேற்குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஏலவே நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்திலும் குறித்த நபர்கள் சிக்கியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment