மார்ச் மாதமளவில் இருந்த விஞ்ஞான அறிவைக் கொண்டே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை கட்டாயமாக எரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும் சுகாதார அமைச்சு அதனை ஆறு மாதங்களில் மாற்றியிருக்கலாம் எனவும் தெரிவிக்கிறார் முன்னாள் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க.
ஆறு மாதங்களில் முவை மாற்றுவதற்கேற்பவே சுற்று நிரூபம் வெளியிடப்பட்டதாகவும் இது குறித்த மேலதிக விஞ்ஞானத்தை ஆராய்வதற்கான கால அவகாசமே பெறப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையில் டிசம்பர் இறுதியில் அரசாங்கம் நியமித்த நிபுணர் குழு, உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதால் ஆபத்தில்லையென பரிந்துரைத்துள்ளது. எனினும், முன்னைய நிபுணர்கள் வலுவாக எதிர்த்து வருவதால் அரசாங்கம் முடிவொன்றை வெளியிடாத சூழ்நிலை நிலவுகிறது. எனினும், எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகின்ற அதேவேளை 'அரசியலே' இவ்விவகாரத்தை முடிவு செய்யும் என தெளிவாகியுள்ளது.
இந்நிலையிலேயே, நிபுணர்களின் பரிந்துரைக்கேற்ப சுகாதார அமைச்சு முடிவை மாற்றியிருக்கலாம் என தெரிவிக்கிறார் அனில் ஜாசிங்க (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment