கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் எரிக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினையில்லையென்கிறார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்.
கல்வியமைச்சர் ஜி.எல். பீரிசோடு இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இவ்விவகாரத்தை 'தேசிய' அரசியல் பிரச்சினையாக்க சில சக்திகள் முனைவதாகவும் அவ்வாறு எதுவும் இல்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இதுவரை அரசின் முடிவை மாற்றவல்ல குழுவெதுவும் நியமிக்கப்படவில்லையெனவும் நிபுணத்துவம் உள்ளவர்களிடமிருந்து அபிப்பிராயமே பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment