பிறக்கும் போதே இறந்து பிறந்த கஹ்டோவிட்டயைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகளின் ஜனாஸா கடுமையான போராட்டத்தின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு வைத்தியசாலை தரப்பு மறுத்திருந்த நிலையில் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களின் தலையீட்டில் இறுதியில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முன் கூட்டியே பிறந்த குழந்தைகளாதலால் அடக்கம் செய்ய வழங்குவதில் இழுபறி நிலவியதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment