நாட்டில் கொரொனா தொற்று கட்டுப்பாடிழந்து விட்டதாகவும் இலகுவான அறிகுறிகள் உள்ளோரை முகாம்களுக்கு அனுப்பாமல் வீடுகளில் தனிமைப்பட அனுமதிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், சுமார் 60,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டியுள்ள நிலையில் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்பட அனுமதிப்பதே சரியான வழியெனவும், உள்நாட்டில் பாரிய உடல் நல பாதிப்புக்குள்ளாதவர்களையும் இவ்வாறே வீடுகளில் தனிமைப்பட அனுமதிப்பதன் மூலம் அரசின் மேலதிக செலவுகளைத் தவிர்க்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்று என்று கண்டறியப்பட்டதும் உடனடியாக முகாம்களுக்கு அனுப்பி பெருமளவில் மக்களைப் பராமரிக்கக் கூடிய வசதிகளில்லாத அதேவேளை மருத்துவர்களின் தட்டுப்பாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டும் அவர் இதனூடாக அரசாங்கம் தாங்க முடியாத செலவீனத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவும், இது தொடர முடியாது எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment