இலங்கைக்கு எதிராக ஐ.நா மனதி உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையைத் தாம் கவனமாக ஆராய்வதாக தெரிவிக்கிறது அமெரிக்கா.
இலங்கையில் இன ஒடுக்குமுறை, சிவில் சமூக செயற்பாடுகள் முடக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் காட்டப்படும் பொடு போக்கு என அனைத்து விவகாரங்களும் தமது கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் இது குறித்து கவனமாக ஆராய்வதாகவும் விளக்கமளித்துள்ளார் அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் நெட் ப்ரைஸ்.
கடந்த அரசு இணங்கியிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலிருந்து நடைமுறை அரசு விலகிக் கொண்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் அழுத்தங்கள் உருவாகியுள்ளமையும் கட்டாய ஜனாஸா எரிப்பும் இதில் பங்களிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment