பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் தாமதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாக். ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கான் இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், சுவீடன், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சார்ந்த உலகின் 10 நாடுகளில் இயங்கி வரும் 34 இலங்கை முஸ்லிம் அமைப்புகள் அவரது வருகையின் போது இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஆட்சியாளர்களிடம் பேசும் படி வலியுறுத்தியிருந்தி அண்மையில் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. அத்துடன் பாகிஸ்தான் அரசியலில் இவ்விவகாரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில், இவ்வாரம் எதிர்பார்க்கப்பட்ட இம்ரான் கானின் விஜயம் தாமதமாவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, இலங்கை அரசு அவரது வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment