கொரோனா தொற்றுக்குள்ளானோரை சிகிச்சை நிலையங்களில் வைத்து பராமரிக்க அரசாங்கம் பாரிய தொகையை செலவு செய்து வருவதாகவும் இந்நிலை தொடர முடியாது என்றும் தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா.
ஹோட்டல்களில் தங்கி சிகிச்சை பெறும் வசதியும் மக்களுக்கு இல்லையென்பதால் அறிகுறிகளின்றி தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும் என நேற்றைய தினம் வத்தளையில் இடம்பெற்ற கட்சி மட்ட சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று திரும்பிய தயாசிறி ஜயசேகரவும் இதே கருத்தை வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment