இலங்கையில் அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு ஊடாக முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வித அநீதியுமிழைக்கப்படவில்லையென்று நேற்றைய தினம் ஐக்கிய இராச்சியத்தில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேவையொன்றில் தூதரகத்தில் பணியாற்றும் முஸ்லிம் நபர் கருத்துரைத்து இங்கிலாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளார்.
பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்சில் (MCB), இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அது தொடர்பில் அங்கு ஒளிபரப்பாகும் இஸ்லாம் செனல் எனும் தொலைக்காட்சியில் இது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தது. இந்நிலையில், இதில் பங்கேற்ற கிண்ணியாவைச் சேர்ந்த தூதரக ஊழியர் அப்துல் ஹலீம், இலங்கையில் முஸ்லிம்களுக்கு இவ்விடயத்தில் எவ்வித அநீதியுமிழைக்கப்படவில்லையெனவும், விஞ்ஞான ரீதியாகவே கட்டாய ஜனாஸா எரிப்பு இடம்பெறுவதாகவும் கருத்துரைத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
முஸ்லிம் கவுன்சில் சார்பாக முன் வைக்கப்பட்ட வாதங்களை இலங்கை முஸ்லிம் ஒருவரே பிழையென நிறுவ முனைந்ததன் பின்னணியில் பாரிய அதிருப்தி உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment