அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியலை தனதாக்கிக் கொண்டுள்ள அதுராலியே ரதன தேரர், ஆளுங்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்ச்சியாக தகவல் அனுப்பியுள்ள போதிலும் மஹிந்த தரப்பு எவ்வித பதிலையும் வழங்காததனால் தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றுக்குள் சென்ற கையோடு முஸ்லிம் விரோத கருத்துக்களை விதைப்பதன் ஊடாக ஆளுங்கட்சியின் சகாவாக மாறுவதற்கு தேரர் முயற்சி செய்து வருகிறார். இப்பின்னணியில் பிரதமருக்கும் நேரடியாக தகவல் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லையென தெரிவிக்கிறார்.
இச்சூழ்நிலையில், தனது வெறுப்பை பகிரங்கமாக தெரிவித்துள்ளார் தேரர்.
No comments:
Post a Comment