ரதுபஸ்வல வழக்கு விசாரணை மேலும் ஒத்தி வைப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 29 January 2021

ரதுபஸ்வல வழக்கு விசாரணை மேலும் ஒத்தி வைப்பு

 


2013 ம் ஆண்டு, தூய குடிநீர் கேட்டுப் போராடிய பொது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவத்தின் பின்னணியிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்திருந்த நிலையில், பிரிகேடியர் அருண தேசப்பிரிய உட்பட நால்வருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.


மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இவ்வழக்கை விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment