இலங்கை துறைமுக அதிகார சபையின் சேவைகள் அனைத்தையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இவ்விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையின் 49 வீத பங்கினை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிரான நடவடிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment