வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர் குண்டு ஒன்று இன்று திங்கள் கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸார், சித்தாண்டி இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கிளைமோர் குண்டினை அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.
மேற்படி கிளைமோர் குண்டு அந்த இடத்தில் யாரால் மறைத்து வைக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித
No comments:
Post a Comment