நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2017 ஓகஸ்ட் மாதத்தில், நாட்டிலுள்ள பெரும்பாலான நீதிபதிகள் பக்க சார்பான தீர்ப்புகளையே வழங்குவதாக ரஞ்சன் தெரிவித்திருந்த கருத்தின் பின்னணியில் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் ரஞ்சன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனூடாக ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment