புதிய அரசியல் கட்சிகளை இம்மாதம் பதிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கிறது தேர்தல் ஆணைக்குழு.
மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லையாயினும் அதற்கான எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இம்மாதம் புதிய கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரத்யேக குழுவொன்றை ஆரம்பித்து இவ்விவகாரம் ஆராயப்பட்டிருந்த நிலையில் பதிவு நடவடிக்கைகளை இம்மாதம் ஆரம்பிக்க இணக்கப்பாடு எட்டியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment