இன்றைய தினம் (22) இலங்கையில் 787 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 438 பேர் ஏலவே கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகத் தெரிவிக்கப்படும் பேலியகொட கொத்தனியோடு தொடர்பிலிருந்தவர்கள் எனவும் மூன்று வெளிநாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையில் இலங்கையில் 56863 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அதேவேளை 48617 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment