2020 ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் பதிவாகிய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஊடாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றைய தினத்தின் முடிவோடு இத்தொகை 50,561 ஆக உயர்ந்துள்ளது. மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவரிலிருந்து இரண்டாவது அலை ஆரம்பித்த போதிலும் அதற்கு முன்பாகவே குறித்த தொழிற்சாலையில் சிலர் அறிகுறிகளோடு பணியாற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் காலத்தில் இலங்கையில் கொரோனா தொற்று வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மூன்று மாதங்களில் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 260க்கு மேற்பட்ட மரணங்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment