இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 48380 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 300க்கு மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
எனினும், இதில் 41325 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தொடர்ந்தும் 6826 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 229 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment