உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் வரவால் இதுவரை நாட்டின் சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
உக்ரைன் லொக்டவுனாகியுள்ள நிலையிலும் அங்கிருந்து உதயங்க வீரதுங்கவின் திட்டப்படி இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டு பல இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
முன்னதாக உதயங்கவின் திட்டங்கள் எதுவும் தமக்குத் தெரியாது என சுற்றுலாத்துறை தெரிவித்திருந்தது. எனினும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்விடயத்தில் உதயங்கவை ஆதரித்து செயற்படுகின்ற நிலையில் இவ்வாறு வருவாய் விபரம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment