தமது நாட்டின் தயாரிப்பான Sinopharm கொரோனா தடுப்பூசிகள் 3 இலட்சத்தினை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது சீனா.
பெப்ரவரி மாதம் நடுப்பகுதியளவில் இவை கையளிக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவினால் வழங்கப்பட்ட பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்த போது, சீனாவிலிருந்தே நிபுணர்கள் வந்திருந்தமையும் தற்போது இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் கட்டாய ஜனாஸா எரிப்பும் சீனாவைத் தழுவியது என அரசு தெரிவிக்கின்றமையும் நினைவூட்டத்தக்க அதேவேளை இந்தியாவும் இலங்கைக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment