நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 772 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் கொழும்பு மாவட்டத்திலிருந்தே (189) அதிக தொற்றாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தொற்றாளர்களுள் இஸ்ரேலில் இருந்து வந்த 29 பேரும் மாலைதீவிலிருந்து வந்த நபரும் உள்ளடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்திலிருந்தும் 178 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, தற்சமயம் 7838 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment