உதயங்க வீரதுங்கவின் திட்டப்படி உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜனவரி 22ம் திகதி முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக விமானங்களையும் தரையிறங்க அனுமதிக்க ஆலோசித்துள்ளதாக தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா.
டிசம்பர் இறுதியில் விமான நிலையங்களைத் திறந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வர அனுமதிப்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அது உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கான திட்டம் என்பது பின்னர் புலப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜனவரி 22 முதல் விமான நிலையங்களை முற்றாகத் திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment