2 மாத குழந்தை எரிப்பு: ரெஹான் கடும் கவலை - sonakar.com

Post Top Ad

Sunday, 17 January 2021

2 மாத குழந்தை எரிப்பு: ரெஹான் கடும் கவலை

 


வெலிகமயைச் சேர்ந்த முஹமத் எனும் பெயர் கொண்ட, பிறந்து இரண்டே மாதங்களான குழந்தை எரியூட்டப்பட்ட விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது போனதையிட்டு பெரும் கவலையடைவதாக தெரிவிக்கிறார் வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம.


பொலிசாருடன் எவ்வளவு பேசியும் எரியூட்டலைத் தடுக்க முடியாமல் போனதாக அவர் கவலை வெளியிட்டுள்ளதுடன் குறித்த குடும்பத்துக்கு உதவுவதற்கு நிதி சேகரிப்பிலும் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.


கடந்த வருடம் மே மாதம், வெலிகமயில் 54 வயது பெண்ணொருவரின் ஜனாஸாவை கட்டாய எரிப்பிலிருந்து மீட்பதற்கு ரெஹான் கடுமையாக முயற்சி செய்து அடக்கம் செய்வதற்கு உதவியிருந்தமை நினைவூகூறத்தக்கது (சோனகர்.கொம்).

1 comment:

Suhood MIY said...

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் இருந்து கடல்வழி மூலமாக அகதியாக தப்பிச் சென்றவரகளின் படகு கடலில் ழுழ்கியமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 மற்றும் 3 வயது குழந்தைகள் நீரில் மூழ்கி இறக்க நேரிட்ட சம்பவத்திற்காக முழு உலகமுமே அழுதது. பத்திரிகைகள் முழுப் பத்தி போட்டு விடயத்தைக் கக்கின. உலக மக்கள் தங்கள் இதயங்களிலும் மாறாத வடு ஏற்பட்டுவிட்டது என்பதனை இதன்மூலம் உலகிற்கு வெளிப்படுத்தினர். ஆட்சியாளர்கள் தம்மால் நிகழ்த்தப்படும் பல விடயங்களுக்கு தம்மிடம் உள்ள அதிகாரத்தின் காரணமாக பொறுப்புக்கூற முன்வரமாட்டார்கள். ஆனால் பொறுப்புக்கூற வேண்டிய தருணம் வராமல் இருக்காது. அத்தருணம் வந்தே தீரும். காலம் மிகவும் பொல்லாதது. காலம் குற்றவாளிகளுக்கு என்றும் கருணைகாட்டாது என்பதனை இதனைப் படிப்பவர்களாவது தமது மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

Post a Comment