நாட்டில் சிறந்த குடிமக்களை உருவாக்கும் நிமித்தம் 18 வயதானவர்கள் தமது பாடசாலைக் காலத்தை முடிவு செய்ததும் ஆகக்குறைந்தது ஆறு மாத காலத்துக்கு கட்டாய இராணுவ பயிற்சியில் இணையும் வகையிலான பிரேரனையொன்றை முன் வைக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் சமூக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
வேறு நாடுகளில் இவ்வழக்கம் இருப்பதாகவும் அதனைப் பின்பற்றி நாடாளுமன்றில் இவ்வாலோசனையை தான் முன் வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், இதனூடாக நாட்டின் சட்ட திட்டங்கள் , துணிச்சல் மற்றும் ஒழுக்கமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என தெரிவிக்கிறார்.
சிங்கப்பூர் உட்பட சில நாடுகளில் இவ்வழக்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment