வவுனியா பொலிஸ் பிரிவில் பணியாற்றும் 16 பொலிசார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு, கொரோனா தடுப்பு பிரிவு மற்றும் விசேட பிரிவைச் சேர்ந்த 16 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில், இவர்களோடு நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்த 35 பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment