மல்வத்துஹிரிபிட்டிய தென்னந் தோட்டம் ஒன்றில் 120 ரூபாய் பெறுமதியான தேங்காய் ஒன்றைத் திருடிய நபரை ஒரு லட்ச ரூபா பிணையில் விடுவித்துள்ளது கம்பஹா மஜிஸ்திரேட் நீதிமன்றம்.
தமது தோட்டத்தில் தேங்காய் திருடியதாக உரிமையாளர்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபருக்கு எதிராக பொலிசார் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கிலேயே நீலமஹர பகுதியில் வசிக்கும் குறித்த நபருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை மீண்டும் மார்ச் மாதம் 18ம் திகதி தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment