நியுசிலாந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான முதலாவது இலங்கையில் பிறந்த நபர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ள வனுஷி வோல்டர்ஸ் தனது கன்னியுரையிலேயே தமிழ் மற்றும் சிங்களத்திலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தனதுரையின் போது 90களில் அரசாங்கத்தை விமர்சித்த ஊடகவியலாளரான ரிச்சர்ட் டி சொய்சா கொலை செய்யப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டி உரையாற்றிய அவர், மனித உரிமைகள் அனைவருக்கும் சொந்தமானது என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.
1987களில் நியுசிலாந்துக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த வனுஷி, மனித உரிமைகள் வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தவர். அவரது உரையின் முக்கிய பகுதிகள் அடங்கிய காணொளியைக் கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment