நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டதால் தான் இந்த நிலை: அமீர் அலி (video) - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 December 2020

நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டதால் தான் இந்த நிலை: அமீர் அலி (video)


 


ஜனாஸா எரிப்பை நிறுத்துவதற்குக் கிடைத்த மிகத் தெளிவான சந்தர்ப்பத்தை 20வது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவற விட்டு விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி.


சோனகர்.கொம் அரசியல் நேரலையில் இணைந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அரசியல் தலையீடு ஒன்றே ஜனாஸா எரிப்பை நிறுத்துமென்றும் 20க்கு ஆதரவளிக்க முன்பாக முன் கூட்டியே அதனை செய்து தரும்படி கோரியிருக்க வேண்டும் எனவும், இறுதி நேரத்தில் கேட்டிருக்க வேண்டிய விடயமில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.


இதேவேளை, குறித்த ஏழு பேரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் எனவும் தெரிவிக்கின்ற அவர், அரசியல் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு 20க்கு ஆதரவளிப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளின் போதே ஜனாஸா எரிப்புக்கு முடிவைக் கண்டிருக்க வேண்டும் எனவும் அதற்கான பொன்னான வாய்ப்பு தவறி விட்டது எனவும் விளக்கமளித்தார்.


குறித்த நேரலையைக் கீழ்க் காணலாம்: 


No comments:

Post a Comment