பைசர் மற்றும் பயொன்டெக் நிறுவன தயாரிப்பிலான கொரோனா தடுப்பூசி பாவனைக்கு ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் 90 வயதான அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அதனைப் பெற்ற முதலாவது நபராகியுள்ளார்.
முதற்கட்டமாக, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இத்தடுப்பூசியினை வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டுள்ளதுடன் சுகாதாரத்துறை ஊழியர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசியைப் பெற்ற 90 வயது பெண் மார்கிரட் கீனன், தான் இத்தருணத்தை நினைத்து பெருமையடைவதாக மகிழ்வுடன் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment