ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் 17 இலங்கை முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து கொரோனா ஜனாஸா அடக்க விவகாரத்தில் மாலைதீவின் தலையீடு தொடர்பில் லண்டனில் உள்ள தூதரகம் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.
முஸ்லிம் சமூக அமைப்புகள் அனுப்பி வைத்திருந்த குறித்த கடிதத்தில் மாலைதீவு இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஜனாஸாக்களைப் பொறுப்பேற்பின் பிற்காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன் தற்போதைய சூழ்நிலையில் பலரது தியாகங்களுக்கு மத்தியில் இடம்பெறும் அரசியல் போராட்டத்திற்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படுவதற்கு மாலைதீவு உதவ வேண்டும் எனவும் அதற்கான ராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் கேரரப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் உடன்பட்ட முக்கிய அமைப்புகள் ஒப்பமிட்டு அனுப்பி வைத்திருந்த கடிதம் கிடைத்தமையை உடனடியாக உறுதிப்படுத்தியுள்ள லண்டன் மாலைதீவு தூதரகம், தலைநகருக்கு தகவலை அனுப்பி வைத்துள்ளமையையும் உறுதி செய்து மின்னஞ்சல் ஊடாக பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment