பல மாதங்களாக உலகம் கொரோனா தொற்றினால் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்களின் இணைத் தயாரிப்பில் உருவான கொரோனா தடுப்பூசிக்கு ஐக்கிய இராச்சியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இப்பின்னணியில், எதிர்வரும் வாரம் முதல் ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் கொரோனா தடுப்பூசியின் பரவலான பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள முதலாவது அங்கீகாரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment