2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையினை ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடாத்துவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை செயற்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ்.
இப்பின்னணியில் குறித்த பரீட்சைகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதுடன் ஆறு வார கால அவகாசத்தில் புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் பாடசாலைகள் மூடப்படுவதனால் இதற்கான சாத்தியமில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment