தமது சமூகத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கடமையைக் கூட அனுமதிக்காது மறுக்கும் அரசுக்கு ஆதரவளித்த மானங்கெட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்துத் தாம் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.
இன்றைய நாடாளுமன்ற உரையின் போது, ஆணித்தரமான கருத்துக்களை முன் வைத்த அவர், இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது குறித்து விபரமாக தெரிவித்ததுடன் முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கும் உரிமையைக் கூட பறித்து, உணர்வூட்டி நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மறைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக உருவகப்படுத்தி அரசாங்கம் தமது இயலாமையை மறைப்பதாக தெரிவித்த அவர், இப்பேற்பட்ட அரசுக்கு முதுகு சொறிவதற்காக மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு 20ம் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்த மானங்கெட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நினைத்தும் அரசின் இவ்வாறான நடவடிக்கைகளை நினைத்தும் அவமானமாக நினைப்பதாக ஆவேசகமாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான காணொளியை கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment