இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளது பிரித்தானிய முஸ்லிம் அமைப்புகளின் கவுன்சில் (MCB).
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அவ்வமைப்பு, தமது தரப்பு இலங்கைத் தூதரகத்தின் வெளியுறவு செயலாளரிடம் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதுடன் கட்டாய ஜனாஸா எரிப்புக்கான முடிவு வாபஸ் பெறப்படாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவுத்துள்ளதாக விளக்கமளித்துள்ளது.
அத்துடன் இவ்விவகாரத்தினை ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கும் கொண்டு செல்லவுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment