முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தகர் முஹமத் ஷியாம் கொலை வழக்கின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே வாஸ், வெலிகட சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதேவேளை, தற்சமயம் 8397 பேர் கொரோனா தொற்றின் பின்னணியில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment