கொரோனா உடலங்களை எரிக்கும் முடிவில் எதுவித மாற்றமும் இல்லையென உறுதிபட தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன.
அரசியல் தரப்புகள் தமக்கேற்ற வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் மக்கள் இதில் குழம்பிக் கொள்ளத் தேவையில்லையெனவும் விளக்கமளித்துள்ள அவர், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் கட்டாயம் எரிக்கப்படுவதொன்றே முடிவு என தெரிவிக்கிறார்.
இதனை வலியுறுத்தி நேற்றைய தினம் பெரமுன ஆதரவு பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).
No comments:
Post a Comment