கபீர் - ஹக்கீம் உணவு - தண்ணீர் அனுப்பினார்கள்: ஜோன்ஸ்டன் - sonakar.com

Post Top Ad

Thursday, 10 December 2020

கபீர் - ஹக்கீம் உணவு - தண்ணீர் அனுப்பினார்கள்: ஜோன்ஸ்டன்

 


தான் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் தனக்கு அப்போதைய அமைச்சர்கள் கபீர் ஹாஷிம் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் உணவு மற்றும் தண்ணீர் அனுப்பி வைத்திருந்ததாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்திருந்ததுடன் ஜோன்ஸ்டன் உட்பட பலர் நிர்வாணப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். எனினும், அதற்கு பதிலளித்த முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துகோறள, ஜோன்ஸ்டன் அவ்வாறு நடந்ததா? என தனது வாயால் விளக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


இந்நிலையில், உரையாற்றிய ஜோன்ஸ்டன் அவ்வாறு தாம் நிர்வாணப்படுத்தப்படவில்லை, ஆனால் விசேடமாக கொழும்பிலிருந்து ஒரு பேருந்தில் 25 பேர் அனுப்பப்பட்டு தான் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதற்கும் பதிலளித்த தலதா, சிறையில் நீங்கள் இருக்கும் காலம் வரை அவ்வாறு எந்தக் குற்றச்சாட்டும் சொல்லவில்லை, மாறாக, உங்கள் நலன் மீது அக்கறை கொண்டு நாம் உதவினோம் என்று பதிலளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஜோன்ஸ்டன், கபீர் ஹாஷிம் தமக்கு உணவுப் பொதி அனுப்பி வைத்ததாகவும் சிறையில் குடிநீர் வசதியின்றி இருந்த போது ரவுப் ஹக்கீம் அதற்கான ஏற்பாட்டைச் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.


எனினும், கடந்த ஆட்சியில் தாம் அரசியல் பழிவாங்கலுக்காளானதாக ஜோன்ஸ்டன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment