வெலிசர தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடியுள்ள கொரோனா தொற்றாளரைத் தேடி விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர் பொலிசார்.
கிரான்ட்பாசைச் சேர்ந்த குறித்த நபர் போலி முகவரியொன்றைக் கொடுத்திருந்ததாகவும் வைத்தியசாலையில் வைத்து கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல் தப்பியோடியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆறு பேர் வைத்தியசாலைகளிலிருந்து தப்பியோடிய போதிலும் அனைவரையும் மீளவும் பிடித்து சிகிச்சைக்காக அனுமதித்திருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment