நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்கி அவரைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்கிறார் உலபனே சுமங்கள தேரர்.
கட்டாய ஜனாஸா எரிப்பின் பின்னணியில் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரப் போக்கினை நோக்கி தள்ளப்படலாம் என அண்மையில் நேர்காணல் ஒன்றில் அலி சப்ரி தெரிவித்திருந்த கருத்தின் அடிப்படையிலேயே சுமங்கள தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில இடங்களில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ள போதிலும் அரசாங்கம் இனவாத அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்கவில்லையெனவும் கட்டாய ஜனாஸா எரிப்பு விஞ்ஞான அடிப்படையிலானது எனவும் நீதியமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment